கட்டுப்பாடுகளை நீக்கும் பிரிட்டன்

கட்டுப்பாடுகளை நீக்கும் பிரிட்டன்

1 mins read
4df33681-faaf-4e5f-9cc9-ab5793bf9cc7
பிரிட்டனில் கடந்த டிசம்பர் மாதம் ஓமிக்ரான் தொற்று உச்சத்தை எட்டியது. எனினும், மருத்துவமனை சிகிச்சை, மரணங்கள் அதே அளவு நிகழவில்லை. படம்: இபிஏ -

லண்டன்: ஓமிக்ரான் தொற்று காரணமாக பிரிட்டன் சிறிது காலம் கட்டுப்பாடுகளை விதித்தது. எனினும், இந்தக் கட்டுப்பாடுகள் வேண்டா விருப்பாகத்தான் அந்நாட்டில் விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தற்பொழுது பிரிட்டன் தான் விதித்த கட்டுப்பாடுகளை நீக்கி கிருமியுடன் வாழப் பழகிக்கொள்ள இருப்பதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.

கூடுதல் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளுதல், நோய் எதிர்ப்பு மாத்திரைகள், இவற்றுடன் ஓமிக்ரான் கிருமி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதாலும் இதை விரட்டி அடித்துவிட முடியாது என்பதாலும் இந்தக் கிருமியுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டியதுதான் என்ற முடிவுக்கு பிரிட்டன் வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

தனிநபர் சுதந்திரம், வர்த்தக சுதந்திரம் போன்றவற்றை பாதிக்கும் கட்டுப்பாடுகளை நீக்க எண்ணம் கொண்டுள்ள மற்ற நாடுகளும் பிரிட்டனின் இந்த நடவடிக்கையை கூர்ந்து கவனித்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.

பிரிட்டனில் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கூறும் அறிவுரை சென்ற வாரத்துடன் நின்றது. அதுபோல், முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு, தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழைக் காண்பிக்கக் கோரும் நடைமுறை போன்றவையும் நேற்று வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. இந்தத் தொற்றை எதிர்கொள்ள விதிமுறைகளை விதிப்பதைத் தவிர்த்து பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பவர்களுக்கு ஆதரவு வழங்கும் போக்குக்கு பிரிட்டன் மாறி வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

"இனி நாட்டு மக்கள் அனைவரையும் குறிவைத்து நடவடிக்கைகள் எடுப்பதை விடுத்து பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பவர்களைக் காப்பதே எங்கள் குறிக்கோள்," என்று பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு அமைப்பு விளக் கியது.