அவசர நிதி உதவி: இலங்கை விரைந்த ஐஎம்எஃப் அதிகாரி

அவசர நிதி உதவி: இலங்கை விரைந்த ஐஎம்எஃப் அதிகாரி

2 mins read
b0da43c2-0d3e-4cca-b180-8e1f3ca6c7f5
-

கொழும்பு: பொரு­ளி­யல் நெருக்­க­டி­யில் தத்­த­ளிக்­கும் இலங்கை, ஐஎம்­எஃப் எனப்­படும் அனைத்­து­லக பண நிதி­யத்­தின் உத­வியை நாடி­யது. அத­னைத் தொடர்ந்து அந்த நிதி­யத்­தின் அதி­காரி ஒரு­வர் கொழும்பு வந்து சேர்ந்­த­தா­க­வும் அவ­ரு­டன் இலங்கை நிதி அமைச்­சர் பேச்சு நடத்­தி­ய­தா­க­வும் தக­வல் அறிந்த வட்­டா­ரங்­கள் கூறி­ய­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி குறிப்­பிட்­டது.

நிதி­யத்­தின் ஆசிய பசி­பிக் பிரிவு இயக்­கு­நர் சாங்­யோங் ரீ என்­ப­வ­ரும் இலங்கை நிதி அமைச்­சர் பாசில் ராஜ­பக்­சே­வும் நடத்­திய பேச்­சு­வார்த்­தை­யின்­போது இலங்கை கரு­வூலச் செய­லா­ளர் எஸ் ஆர் அடி­கா­வே­வும் பங்­கேற்­ற­தாக அச்­செய்தி தெரி­வித்­தது.

ஏற்­கெ­னவே பொரு­ளி­யல் தவிப்­பில் இருக்­கும் இலங்­கைக்கு உக்­ரேன்-ரஷ்ய போர் அதன் கடன் சுமையை அதி­க­ரித்­து­விட்­டது.

உல­கத்­தின் கவ­னம் போர் மீது திரும்பி இருப்­ப­தால் இந்­தியா, சீனா போன்ற நட்பு நாடு­

க­ளின் உதவி கிடைப்­பது இலங்­கைக்­குத் தாம­த­மாகி வரு­கிறது. இலங்­கை­யின் அந்­நி­யச் செலா­வணி கையி­ருப்பு கடந்த மாதம் $2.31 பில்­லி­ய­னுக்­குக் குறைந்­து­விட்­டது.

எரி­பொ­ருள், உண­வுப் பொருள் மற்­றும் மருந்­துப் பொருள்­க­ளுக்­கான இறக்­கு­ம­திக்கு இலங்கை அர­சாங்­கத்­தால் பணம் செலுத்த இய­லாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இத­னால், அடிக்­கடி ஏற்­படும் மின்­த­டையை மக்­கள் சந்­தித்து வரு­கின்­ற­னர். எரி­பொ­ருள் நிரப்ப நீண்ட வரிசை எப்­போ­தும் காணப்­ப­டு­கி­ற­து. தாரா­ளப் புழக்­கத்தை அர­சாங்­கம் அனு­ம­தித்­த­தைத் தொடர்ந்து இலங்­கை­யின் ரூபாய் மதிப்பு கடந்த வாரம் 30 விழுக்­காடு வீழ்ச்சி அடைந்­தது. இத­னால் விலை­வாசி மேலும் மேலும் உய­ரும் நிலை உரு­வாகி உள்­ள­தாக ராய்ட்­டர்ஸ் கூறியது.