சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 15) 15,851 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதியானது. தொடர்ந்து இரண்டு நாள்களாக 10,000க்குக் கீழ் பதிவாகி வந்த கிருமித்தொற்று பாதிப்பு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடியது.
பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் பதிவாகும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை மற்ற கிழமைகளைவிட அதிகமாக இருக்கும் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை பதிவாகியிருந்த தொற்று எண்ணிக்கையைவிட நேற்று பதிவான தொற்று குறைவு.
வாராந்திர கிருமித்தொற்று விகிதம் 0.8க்கு குறைந்தது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதிக்குப் பிறகு நேற்றுதான் வாராந்திர கிருமித்தொற்று விகிதம் ஆகக் குறைவாகப் பதிவானது.
கிருமித்தொற்றுக்கு ஆளானோரில் 1,311 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் மரணமடைந்தனர்.
40 பேர் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 191 பேருக்கு உயிர்வாயு தேவைப்பட்டது.


