நெட்ஃப்ளிக்ஸ் சேவையைப் பகிர்ந்துகொள்ள கூடுதல் கட்டணம்

நெட்ஃப்ளிக்ஸ் சேவையைப் பகிர்ந்துகொள்ள கூடுதல் கட்டணம்

1 mins read
d5c6092a-9327-4cd4-9a9a-d3c081e0c321
Google News Preferred Icon

புகழ்பெற்ற நெட்ஃப்ளிக்ஸ் இணையக் காணொளி ஒளிபரப்புச் சேவையைப் பெரும்பாலானோர் தங்கள் உறவினர், நணபர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள். கூடியவிரைவில் அவ்வாறு செய்ய சந்தாதாரர்கள் கட்டணம் செலுத்தவேண்டும். அதுகுறித்து நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.

தற்போது சந்தாதாரர்கள் தங்கள் நெட்ஃப்ளிக்ஸ் சேவை மறைவுச்சொல்லை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். இதன் மூலம் ஒரு சேவை கணக்கைப் பலர் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு எந்தவொரு கட்டணமும் கிடையாது.

சென்ற காலாண்டிலிருந்து நெட்ஃப்ளிக்ஸ் சேவைக்கு விண்ணப்பம் செய்யும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. அதோடு, அண்மை காலத்தில் பல நிறுவனங்கள் இணையக் காணொளி ஒளிபரப்புச் சேவையில் இறங்கியுள்ளதால், இந்தத் துறையில் கடும் போட்டி நிலவுகிறது.

தென் அமெரிக்கா நாடுகளான சிலி, பெரு, கோஸ்ட்டா ரிக்கா ஆகிய நாடுகளில் முதல் கட்ட சோதனைகள் அடுத்த வாரம் தொடங்கும். சந்தாதாரர்கள் தங்கள் சேவையை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள $2 டாலர் மாதந்திரக் கட்டணம் செலுத்தவேண்டும்.

இந்தச் செயல்பாட்டை மற்ற நாடுகளுக்கு விரிவுப்படுத்துவது பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்தது.

உலகெங்கும் சுமார் 221.8 மில்லியன் மக்கள் நெட்ஃப்ளிக்ஸ் சேவையைப் பெற்றுள்ளனர்.