ஏமனைப் பஞ்ச நிலைக்குத் தள்ளும் உக்ரேன் போர்

ஏமனைப் பஞ்ச நிலைக்குத் தள்ளும் உக்ரேன் போர்

1 mins read
65b59309-5060-405b-8b2f-f2139a56e2b2
போரால் பாதிக்கப்பட்ட ஏமனில் பஞ்சம் ஏற்படும் அபாயம் (படம்: எஃபி) -

உள்நாட்டு போரால் ஏற்கனவே உணவுத் தட்டுப்பாடு உள்ள ஏமனில் இப்போது பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.

உக்ரேன்-ர‌ஷ்யப் போரால் ஏமனுக்கு உணவு ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் 30 மில்லியனுக்கு மேற்பட்ட ஏமனியர்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்படலாம்.

கடந்த ஏழு ஆண்டுகளாக உள்நாட்டு போர் நாட்டை வாட்டிவருகிறது. ஏற்கனவே ஆக ஏழை அரபு நாடான ஏமன் இப்போது ஆக மேசாமான மனிதாபிமான நெருக்கடியைச் சந்திக்கிறது என ஐக்கிய நாட்டு கூறியுள்ளது.

அதிகரிக்கும் உணவு விலைகள், அடிமட்டத்தில் உள்ள பொருளியல் ஆகியவற்றால் கிட்டத்தட்ட 30,000 மக்கள் பஞ்ச நிலையில் வாடுகின்றனர். 17 மில்லியனுக்கு மேற்பட்டோர் உணவு தட்டுப்பாடை எதிர்நோக்குகின்றனர்.