இலங்கை ஆர்ப்பாட்டத்தில் மாண்டவரின் இறுதிச் சடங்கில் குவிக்கப்படும் ராணுவம்

இலங்கை ஆர்ப்பாட்டத்தில் மாண்டவரின் இறுதிச் சடங்கில் குவிக்கப்படும் ராணுவம்

22 Apr 2022 - 4:12 pm

1 mins read

இலங்கை ஆர்ப்பாட்டத்தில் மாண்டவரின் இறுதிச் சடங்கை முன்னிட்டு ரம்புக்கனா வட்டாரத்தில் ராணுவப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அதிபர் கோத்தபாய ராஜபக்சேவின் உத்தரவின்படி படைகள் அவ்வட்டாரத்தில் மூன்று நாள்கள் காவலில் இருக்கும். அமைதியை நிலைநாட்டவும், உள்ளூர்க் காவல் அதிகாரிகளுக்கு உதவவும் இராணுவ படைகள் அங்குக் குவிக்கப்பட்டுள்ளன.

ரம்புக்கனா வட்டாரத்தில் நடந்த ஆர்ப்­பாட்­டத்­தின்­போது 41 வயதான ச்சமிண்டா லக்‌ஷன் என்பவர் கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறவுள்ளது.

பொருளதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கை $4 பில்லியன் டாலர் அவசர உதவிநிதி கோரியுள்ளது. எரிப்பொருள், உணவு, உயிர்க்காக்கும் மருந்து ஆகியவற்றை வாங்க நிதி பயன்படுத்தப்படும்.