காதல் மனைவியின் சடலத்திற்கு 21 ஆண்டுகள் கழித்து இறுதிச் சடங்கு செய்த முதியவர்

காதல் மனைவியின் சடலத்திற்கு 21 ஆண்டுகள் கழித்து இறுதிச் சடங்கு செய்த முதியவர்

1 mins read
b5a3a5bc-8b4f-4cd1-b22c-4205594a2fdb
-

பேங்­காக்: காதல் மனை­வி­யின் சட­லத்தை 21 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு தக­னம் செய்­துள்­ளார் 72 வய­தான ஆட­வர்.

தற்போது, மனை­வி­யின் சாம்­பலை வீட்­டிலேயே வைத்து, அவரது பெய­ரில் அறப்­பணி செய்து­வ­ரு­கி­றார் சார்ன் ஜன்­வாட்­சாக்­கல் (படம்).

மனைவி மீது இவர் வைத்­தி­ருக்­கும் ஆழ­மான காதல் பல­ரது உள்­ளங்­களை நெகி­ழ­வைத்­துள்­ளது.

கடந்த 20 ஆண்­டு­க­ளுக்கு மேலாக மனை­வி­யின் உடலை வீட்டிலேயே வைத்து அத­னு­டன் பேசியும் ­மனைவியின் சடலம் வைக்­கப்­பட்ட சவப்­பெட்டி பக்­கத்­தில் தூங்­கி­யும் வந்தார் சார்ன்.

இதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாத அவ­ரது இரண்டு மகன்­களும் வீட்டைவிட்டு வெளி­யே­றி­னர்.

தாம் மாண்ட பிறகு, மனை­விக்கு முறை­யான இறு­திச்­ச­டங்கு நடக்­குமா என்ற அச்­சம் எழுந்த பிறகு, தாம் உயி­ரு­டன் இருக்­கும்­போதே மனை­விக்­குப் பிரி­யா­விடை கொடுக்க முடி­வெ­டுத்­தார் சார்ன்.

மனை­வி­யின் நல்­லு­டல் தகனச்­சா­லைக்கு எடுத்­து­செல்லப்­பட்­ட­போது, சார்ன் கதறி கதறி அழு­தார்.

மனை­வி­யின் சாம்­பலை ஒரு வெள்­ளைத் துணி­யில் சுற்றி அதை வீட்­டுக்கு எடுத்­துச்­சென்­றார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

தாய்­லாந்து ராணு­வத்­தில் மருத்­து­வ­ரா­கப் பணி­யாற்­றிக்­கொண்­டி­ருந்­த­போது, சுகா­தார அமைச்­சில் வேலை­பார்த்­துக்­கொண்­டி­ருந்த தமது மனைவி­யைச் சந்­தித்த­தாக சார்ன் நினை­வு­கூர்ந்­தார். படம்: இணையம்