உலகின் ஆக நீளமான தொங்குபாலம்

உலகின் ஆக நீளமான தொங்குபாலம்

1 mins read
5a0fd9bf-76e1-49aa-9115-d3f5e74e8969
செக் குடியரசில் கட்டப்பட்டுள்ள 'ஸ்கை பிரிட்ஜ் 721'. படங்கள்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 2

டொல்னி மொராவா (செக் குடியரசு): உலகின் ஆக நீளமான 'சஸ்பென்ஷன் ஃபுட்பிரிட்ஜ்' எனும் தொங்கும் நடைப்பாலம் திறக்கப்பட்டுள்ளது.

721 மீட்டர் நீளம்கொண்ட இந்த நடைப்பாலம் வெள்ளிக்கிழமை (மே 13) திறக்கப்பட்டது.

ஈராண்டுகளாகக் கட்டப்பட்ட இதன் பெயர் 'ஸ்கை பிரிட்ஜ் 721'.

செக் குடியரசின் டொல்னி மொராவா பகுதியில் அமைந்துள்ள இந்த நடைப்பாலத்துக்கான செலவு 11.7 மில்லியன் வெள்ளி.

கடலுக்கு மேல் 1,100 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் கட்டப்பட்டுள்ள 'ஸ்கை பிரிட்ஜ் 721' மீது நடக்கும்போது சிலர் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகலாம்.