இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அந்நாட்டின் இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ளார். முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறியதைத் தொடர்ந்து, திரு விக்ரமசிங்கே இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜனநாயகத்துக்கு எதிராக எழுந்துள்ள மிரட்டல்களை உடனடியாக நிறுத்தவேண்டும். அரசாங்க உடமைகள் சேதமடைவது தகித்துகொள்ள முடியாது. அதிபர் அலுவலகம், அதிபர் செயலகம், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லம் ஆகியவை அரசாங்க அதிகாரிகளிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும். நாட்டில் மீண்டும் சட்டஒழுங்கை நிலைநாட்ட காவல் துறை, இராணுவம் ஆகியவற்றுக்கு கட்டளையிட்டிருப்பதாக திரு விக்ரமசிங்கே குறிப்பட்டார். பதவி ஏற்ற பிறகு, அவர் ஆற்றிய முதல் தொலைக்காட்சி உரையில் இவ்வாறு கூறினார்.
இரண்டு மாதங்களுக்கு முன் பிரதமராக திரு விக்ரமேசிங்கே தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன.

