சீனாவில் குறையும் மக்கள்தொகை

சீனாவில் குறையும் மக்கள்தொகை

1 mins read
c2645f3d-c1ad-4655-a9a4-fa639191ff84
படம்: ஏஃபி -

சீனாவின் மக்கள்தொகை 2025ஆம் ஆண்டுக்குள் குறையும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாட்டின் மக்கள்தொகை 2025க்கு பின்னரே குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

சென்றாண்டு பிறப்பு விகிதம் மற்ற ஆண்டுகளைக் காட்டிலும் குறைந்துள்ளது. ஹுனான் மாநிலத்தில் அறுபது ஆண்டுகளில் முதன்முறையாக பிறப்பு விகிதம் 500,000க்கு கீழ் என பதிவானது. குவாங்டோங் மாநிலத்தில் மட்டுமே ஒரு மில்லியன் பிறப்புகள் பதிவு செய்யப்பட்டன.

உயரும் வாழ்க்கைச் செலவினம், வேலைப் பளு போன்ற காரணங்களால் பல இளையர்கள் பிள்ளை பெற்றுகொள்வதில்லை. குறைந்துவரும் பிறப்பு விகிதத்தை மாற்ற சீன அராசங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது.

மூன்று பிள்ளைகள் வரை பெற்றுகொள்ளலாம் எனும் புதிய சட்டம் சென்றாண்டு நடப்புக்கு வந்தது. ஆனால் அது பலனளிக்கும் என்று தெரியவில்லை. இந்த சட்டம் காலதாமதமாக கொண்டுவரப்பட்டதாக பெண்கள் கருதுகின்றனர்.