மலேசியாவிற்கு எதிரான தடையை நீக்கியது இந்தோனீசியா

மலேசியாவிற்கு எதிரான தடையை நீக்கியது இந்தோனீசியா

1 mins read
4d608d95-8539-425b-91af-a8b994365348
-

கோலா­லம்­பூர்: தனது மக்­களை மலே­சி­யா­விற்கு வேலைக்கு அனுப்­பு­வ­தற்­கான தடையை நீக்க இந்­தோ­னீ­சியா ஒப்­புக்­கொண்­டுள்­ள­தாக மலே­சி­ய மனி­த­வள அமைச்­சர் தெரி­வித்­தார்.

ஊழி­யர்­க­ளின் பிரச்­சினை குறித்து இரு­நா­டு­க­ளுக்­கும் இடையே தீர்­வு­ ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்­தோ­னீ­சிய ஊழி­யர்­கள் மலே­சி­யா­விற்­குச் செல்­ல­லாம்.

கிட்­டத்­தட்ட 1.2 மில்­லி­யன் ஊழி­யர்­க­ளுக்­குப் பற்­றாக்­குறை நில­வும் மலே­சி­யா­வில், இந்­தோ­னீ­சிய ஊழி­யர்­க­ளின் வருகை, குறிப்­பாக தோட்­டத்­து­றை­யில், உத­வி­யாக இருக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

இல்­லப் பணி­யா­ளர்­க­ளாக செல்­லும் தனது மக்­க­ளின் பாது­காப்பை உறுதி செய்­யும் நோக்­கில் மேற்­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தம் மீறப்­பட்­ட­தால், மலே­சி­யா­வின் தோட்­டத்­துறை உள்­ளிட்ட வேலை­க­ளுக்­குத் தனது ஊழி­யர்­களை அனுப்­பு­வதை இந்த மாதம் 13ஆம் தேதி இந்­தோ­னீ­சியா நிறுத்­தி­யது.

இந்­தோ­னீ­சி­யப் பணி­யா­ளர்­களை நிய­ம­னம் செய்ய ஒற்றை வழி முறையை சோதனை செய்ய இரு­நா­டு­களும் ஒப்­புக்­கொண்­ட­தைத் தொடர்ந்து, தனது ஊழி­யர்­களை மீண்­டும் அனுப்ப இந்­தோ­னீ­சியா ஒப்­புக்­கொண்­ட­தாக மலே­சி­யா­வின் மனி­த­வள அமைச்­சர் எம்.சர­வ­ணன் ஒரு அறிக்­கை­யில் தெரி­வித்­தார்.

இல்­லப் பணி­யா­ளர்­களை நிய­ம­னம் செய்ய மலே­சியா, முன்பு இணைய ஆட்­சேர்ப்பு நடை­மு­றை­யைப் பின்­பற்­றி­யது. ஆனால், ஆட்­கடத்­தல், கட்­டாய உழைப்பு போன்ற குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு அது வழி­வகுத்­த­தாக குற்­றம்­சாட்­டு­கள் கூறப்­பட்­டதால், இந்தோனீசியா அந் நடைமுறையைப் பின்பற்றக்கூடாது என்கிறது.