ஜோகூர் சுங்கச் சாவடியில் நெரிசலைக் குறைக்க கூடுதல் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவர் என்று மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது. தீபாவளி பொது விடுமுறையை முன்னிட்டு அதிகாமானோர் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு பயணம் செய்ததால் ஜோகூர் சுங்கச் சாவடியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமையன்று இரவு 8 மணியளில் 5,000க்கும் மேற்பட்டோர் ஜோகூர் சுங்கச் சாவடியைச் சென்றடைந்தனர். இதனால் அங்கு இரண்டு மணிநேரத்துக்கும் மேல் நெரிசல் ஏற்பட்டது. இரவு பத்தரை மணியளவில் நெரிசல் குறைந்ததாகக் கூறப்பட்டது.
துணை காவல்துறை அதிகாரிகள், தொண்டூழிய படைகள் ஆகியவற்றின் உதவியுடன் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக காவல்துறையிர் கூறினர். ஜோகூர் சுங்கச் சாவடியில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த மலேசிய அதிகாரி ஒருவர் முயற்சிசெய்யும் காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

