அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான விமானச் சேவைகள் பாதிப்பு

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான விமானச் சேவைகள் பாதிப்பு

1 mins read
0f9eaf99-64af-4706-a47b-aa60d7ef7da7
படம்: பிக்ஸாபே -

நியூ­யார்க்: தொழில்­நுட்­பக் கோளாற்­றால் அமெ­ரிக்­கா­வில் 1,000க்கும் மேற்­பட்ட விமா­னச் சேவை­கள் ரத்­தா­யின அல்­லது ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன. உள்­நாட்டு மட்­டு­மின்றி அனைத்­து­லக விமா­னச் சேவை­களும் பாதிக்­கப்­பட்­டன.

1,200க்கும் மேற்­பட்ட விமா­னச் சேவை­கள் தாம­த­ம­டைந்­த­தா­க­வும் குறைந்­தது 100 விமா­னச் சேவை­கள் ரத்­தா­ன­தா­க­வும் விமா­னச் சேவை கண்­கா­ணிப்பு நிறு­வ­ன­மான 'ஃபிலைட்­அ­வேர்' தெரி­வித்­தது.

'எஃப்ஏஏ' எனும் அமெ­ரிக்­கா­வின் மத்­திய விமா­னத் துறை நிர்­வா­கப் பிரி­வில் தொழில்­நுட்­பக் கோளாறு ஏற்­பட்­ட­தால் இப்பிரச்­சினை உரு­வா­னது.