அழகு, கொள்கை வென்று தந்த மகுடம்

அழகு, கொள்கை வென்று தந்த மகுடம்

1 mins read
e63c5a5f-4123-46aa-adb3-3905b745e3d3
-

நியூ ஓர்லன்ஸ்: இவ்வாண்டின் பிரபஞ்ச அழகிப் போட்டியில் 28 வயது அமெரிக்க அழகி ஆர்'போனி கேப்ரியல் மகுடம் சூடியுள்ளார். இப்போட்டியை வென்ற முதல் பிலிப்பீனோ-அமெரிக்கர் எனும் பெருமை இவரைச் சேரும். இவர் ஆடை வடிவமைப்பாளராகவும் விளம்பர அழகியாகவும் பணிபுரிகிறார்.

மறுசுழற்சி செய்யப்படும் பொருள்களைக் கொண்டு ஆடை வடிவமைப்பதாகவும் ஆள் கடத்தல், குடும்ப வன்முறை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர்களுக்குத் தையல் தொழில் கற்பித்துத் தருவதாகவும் அவர் தெரிவித்தார். 71வது பிரபஞ்ச அழகிப் போட்டியில் இரண்டாவது நிலையை வெனிசுவேலாவின் அமேண்டா டுடமெலும் மூன்றாவது இடத்தை டொமினிக்கன் குடியரசின் ஆண்ட்ரைனா மார்டினேசும் பிடித்தனர். 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வாண்டில்தான் பிரபஞ்ச அழகிப் பட்டத்தை அமெரிக்கா வென்றுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற இப்போட்டியில் 80க்கும் மேற்பட்ட அழகிகள் பங்கேற்றனர். அவர்களில் சிங்கப்பூரின் கரிஸ்ஸா யாப்பும் ஒருவர். கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் ஹர்னாஸ் சந்து வெற்றி பெற்றார்.