வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூ மெக்சிக்கோ மாநிலத்தில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளைக் குறிவைத்து துப்பாக்கிக்காரர்கள் சிலர் சுட்டனர்.
இதுதொடர்பாக முன்னாள் குடியரசுக் கட்சி வேட்பாளர் திரு சாலமன் பெனாவை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
39 வயது சாலமன் பெனா, கடந்த நவம்பர் 8ல் நடைபெற்ற நியூ மெக்சிக்கோ சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஜனநாயக வேட்பாளரிடம் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச் சூட்டுக்கு அவர்தான் காரணம் என நம்பப்படுகிறது. பெனா மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

