12,000 பேரை ஆட்குறைப்பு செய்த அல்ஃபபெட் நிறுவனம்

12,000 பேரை ஆட்குறைப்பு செய்த அல்ஃபபெட் நிறுவனம்

fallback-0

21 Jan 2023 - 5:30 am

1 mins read

சான் ஃபிரான்­சிஸ்கோ: அல்­ஃப­பெட் நிறு­வ­னம் 12,000 பேரை ஆட்­கு­றைப்பு செய்­துள்­ளது. கூகல் நிறு­வ­னம் அல்­ஃப­பெட் நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மா­னது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த சில ஆண்­டு­க­ளாக தமது நிறு­வ­னம் மிக விரை­வாக ஊழி­யர்­களை வேலைக்கு எடுத்­தது என்று அல்­ஃப­பெட் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி சுந்­தர் பிச்சை தெரி­வித்­தார்.

ஆனால் அப்­போ­தைய பொரு­ளி­யல் சூழல் வேறு, தற்­போ­தைய பொரு­ளி­யல் சூழல் வேறு என்று அவர் கூறி­னார்.

"அல்­ஃப­பெட் நிறு­வ­னத்­துக்­குத் தற்­போது ஏற்­பட்­டுள்ள நிலை­மைக்கு நான் முழுப் பொறுப்பு ஏற்றுக்­கொள்­கி­றேன்," என்று திரு சுந்­தர் பிச்சை தெரி­வித்­தார்.

சில நாள்­க­ளுக்கு முன்பு அல்­ஃப­பெட் நிறு­வ­னத்­தின் போட்டி நிறு­வ­ன­மான மைக்­ரோ­சா­ஃப்ட், 10,000 பேரை ஆட்­கு­றைப்பு செய்ய இருப்­ப­தாக தெரி­வித்­

தி­ருந்­தது.

அல்­ஃப­பெட் நிறு­வ­னத்­தின் ஆள்­சேர்ப்பு, பொறி­யி­யல் உட்­பட மற்ற சில பிரி­வு­களில் பணி­பு­ரிந்த ஊழி­யர்­கள் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­ட­னர். உல­க­ளா­விய நிலையில் ஊழி­யர்­களை ஆட்­

கு­றைப்பு செய்­வ­தா­க­வும் அமெ­ரிக்­கா­வில் ஆட்­கு­றைப்பு உட­ன­டி­யாக நடத்­தப்­படும் என்று கூகல் தெரி­வித்­தது. பொரு­ளி­யல் நிலை­யற்­ற­தன்மை நில­வி­வ­ரும் வேளை­யில் இந்த ஆட்­கு­றைப்பு அறி­விப்பு செய்­யப்­பட்­டுள்­ளது. எதிர்­கா­லத்­தில் தமது நிறு­வ­னத்­துக்கு இருக்­கும் வாய்ப்­பு­களை நன்கு பயன்ப­டுத்தி பல­ன­டைய முடி­யும் என்று திரு சுந்­தர் பிச்சை நம்­பிக்கை தெரி­வித்­தார். அமெ­ரிக்­கா­வில் ஆட்­கு­றைப்பு செய்­யப்­ப­டும்­ ஊ­ழி­யர்­க­ளுக்கு நான்கு மாத சம்­ப­ள­மும் ஆறு மாத சுகாதார சலுகைகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.