ஆடவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு

ஆடவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு

1 mins read
489e2867-1abd-48fa-af47-4d9733967219
மெரிக்காவில் கலிஃபோர்னியா மாநிலத்தில் வேண்டுமென்றே காரை ஓட்டிச் சென்று மலையிலிருந்து விழவைத்து தமது குடும்பத்தினரைக் கொலை செய்ய 41 வயது தர்மேஷ் ஏ. பட்டேல் முயன்றதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். படம்: பிக்ஸாபே -

சான் மாட்டியோ: அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாநிலத்தில் வேண்டுமென்றே காரை ஓட்டிச் சென்று மலையிலிருந்து விழவைத்து தமது குடும்பத்தினரைக் கொலை செய்ய 41 வயது தர்மேஷ் ஏ. பட்டேல் முயன்றதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, அவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக தர்மேஷின் மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உயிர் தப்பினர். காரில் இருந்த நால்வருக்கும் உயிருக்கு ஆபத்து விளைவிக்காத காயங்கள் மட்டுமே ஏற்பட்டன.