கென்டக்கி: அமெரிக்காவின் கென்டாக்கி நகரில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்டதில் பலர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஆகக் கடைசி நிலவரப்படி மரண எண்ணிக்கை உறுதியாகத் தெரியவில்லை. ஒன்பது பேர் வரை மாண்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 9.35 மணியளவில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஃபோர்ட் கேம்ப்பெல் ராணுவத் தளத்திற்கு அருகே உள்ள ட்ரிக் கெளன்டி பகுதியில் விபத்து நேர்ந்தது.

