ஐநா: ஊடகச் சுதந்திரத்துக்கு உலகெங்கும் ஆபத்து

ஐநா: ஊடகச் சுதந்திரத்துக்கு உலகெங்கும் ஆபத்து

04 May 2023 - 5:30 am

1 mins read

நியூ­யார்க்: ஊட­கச் சுதந்­தி­ரத்­துக்கு உல­கெங்­கும் ஆபத்து ஏற்­பட்­டுள்­ள­தாக ஐநா கவலை தெரி­வித்­துள்­ளது.

பல இடங்­களில் செய்­தி­யா­ளர்­கள் தாக்­கப்­ப­டு­வ­தா­க­வும் சிறை­யில் அடைக்­கப்­ப­டு­வ­தா­க­வும் கொல்­லப்­ப­டு­வ­தா­க­வும் அது கூறி­யது. செய்தி நிறு­வ­னங்­க­ளுக்கு மிரட்­டல்­கள் விடுக்­கப்­ப­டு­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது. உலக ஊட­கச் சுதந்­திர தினத்தை முன்­னிட்டு பேசிய ஐநா தலை­மைச் செய­லா­ளர் அண்­டோ­னியோ குட்­டே­ரஸ் செய்­தி­யா­ளர்­களும் ஊட­கங்­களும் பாது­காக்­கப்­பட வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார். "ஊட­கச் சுதந்­தி­ரம் இருந்­தால்­தான் நாம் அனை­வ­ரும் சுதந்­தி­ர­மாக வாழ முடி­யும்," என்று காணொளி மூலம் தெரி­வித்­தார் திரு குட்­டே­ரஸ்.

ஊட­கச் சுதந்­தி­ரம் ஜன­நா­ய­கத்­தின் அடித்­த­ளம் என்­றும் மனித உரி­மை­யின் உயிர் நாடி என்­றும் அவர் கூறி­னார்.

இவ்­வாண்­டுக்­கான உலக ஊட­கச் சுதந்­தி­ரப் பரிசை மூன்று ஈரா­னி­யப் பெண்­களுக்கு யுனேஸ்கோ வழங்கி கௌர­வித்­தது. அவர்­களில் இரு­வர் செய்­தி­யா­ளர்­கள், ஒரு­வர் மனித உரிமை ஆர்­வ­லர். மூவ­ரும் சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­வர்­கள்.