உலகின் முதல் 'ஆட்டிசம்' நோயாளி காலமானார்

உலகின் முதல் 'ஆட்டிசம்' நோயாளி காலமானார்

18 Jun 2023 - 6:14 pm

1 mins read

வாஷிங்டன்: உலகில் 'ஆட்டிசம்' எனப்படும் மதியிறுக்க நோய்க்கு ஆளான முதல் நபர் காலமானார்.

அமெரிக்காவைச் சேர்ந்த டோனல்ட் ட்ரிப்லெட் என்ற இவருக்கு வயது 89.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் வியாழக்கிழமையன்று மாண்டார்.

மிசிசிப்பி மாநிலத்தில் உள்ள சிறிய நகரான ஃபார்ஸ்டில் இருக்கும் தனது வீட்டில் திரு ட்ரிப்லெட் அமைதியான முறையில் உயிரிழந்ததாக அவரின் உறவினர் அமெரிக்க ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தினார்.

1943ஆம் ஆண்டு வாக்கில் இவரிடம் மதியிறுக்க நோய்க்கான அறிகுறிகள் இருந்ததை மருத்துவர்கள் அடையாளம் கண்டனர்.

ஃபாரஸ்ட் நகரில் 'டான்' எனச் செல்லமாக அழைக்கப்படும் திரு ட்ரிப்லெட், மிக எளிதில் கணக்கிடக்கூடிய ஆற்றலைப் பெற்றவர் என்றும் மனப்பாடம் செய்வதில் வல்லவர் என்று அறியப்படுகிறது.