ஜெருசலேம்: மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. திங்கட்கிழமை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பாலஸ்தீனப் பாதுகாப்பு படை வீரர் உட்பட ஐவர் பலியாகினர். இதற்குப் பதிலடியாக பாலஸ்தீனப் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் எட்டு இஸ்ரேல் வீரர்கள் காயமடைந்தனர். இச்சம்பவத்தில் ஒரு ஹெலிகாப்டரும் தீப்பற்றி எரிந்தது.
பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதியில் உள்ள ஜெனின் நகரில் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக பாலஸ்தீன அரசுத் தரப்பு தெரிவித்தது.


