தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வியட்னாம் செல்லவிருக்கும் அமெரிக்கப் போர்க்கப்பல்

1 mins read
83f25295-80c9-46e3-a787-a33dd6b502fd
அணுவாயுதத் திறன் கொண்ட அமெரிக்காவின் போர்க்கப்பலான ரொனால்ட் ரீகன ஞாயிற்றுக்கிழமை வியட்னாம் செல்லவிருக்கிறது. வியட்னாம் போருக்குப் பிறகு அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் ஒன்று வியட்னாம் செல்வது இது மூன்றாவதுமுறை. - படம்: சாவ்பாவ்

ஹனோய்: அணுவாயுதத் திறன்கொண்ட அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பலான ரொனால்ட் ரீகன் வரும் ஞாயிற்றுக்கிழமை வியட்னாமின் டானாங் துறைமுகத்தில் நங்கூரம் இடவிருக்கிறது.

ஜூம் 30ஆம் தேதி வரை அக்கப்பல் அங்கிருக்கும் என்று வியட்னாமிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளரை மேற்கோள்காட்டி வியட்னாமிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வியட்னாமியப் போர் முடிந்து 25 ஆண்டுகள் நிறைவுபெற்றதைக் குறிக்கும் வகையில் 2020ஆம் ஆண்டு யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் போர்க்கப்பல் வியட்னாம் சென்றிருந்தது.

தென் சீனக் கடல் எல்லை தொடர்பில் வியட்னாமிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், வாஷிங்டன் ஹனோயுடனான உறவை மேம்படுத்த முனைந்துள்ளது.

தென் சீனக் கடல் வட்டாரம் முழுவதற்கும் பெய்ஜிங் உரிமை கொண்டாடி வருகிறது. வியட்னாம் உள்ளிட்ட சில நாடுகளும் அவ்வட்டாரத்தில் உரிமை கோருகின்றன.

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் வட்டாரத்திற்கு அமெரிக்கப் போர்க்கப்பல்களும் சீனப் போர்க்கப்பல்களும் அடிக்கடி செல்வதுண்டு.

குறிப்புச் சொற்கள்