சுட்டெரிக்கும் வெயில்: பெய்ஜிங்கில் சிவப்பு எச்சரிக்கை

பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் வெயில் கொளுத்தி வருவதால் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இது தலைநகரின் பெரும்பாலானபகுதிகளில் வெயில் 40 டிகிரி செல்சியஸ்வரை சுட்டெரிப்பதைக் குறிக்கிறது. வியாழக்கிழமை பிற்பகல் பதிவான 41.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே அந்நகரின் மிகவும் அதிகமான வெப்பநிலை.

சீனா நான்கு அடுக்கு வானிலை எச்சரிக்கை அமைப்பைக் கொண்டுள்ளது. அந்த அடுக்கில் சிவப்பு நிறம் தீவிரமான எச்சரிக்கையைக் குறிக்கும். ஆரஞ்சு, மஞ்சள், நீலம் போன்ற நிறங்கள் எச்சரிக்கையில் அதனைப் பின்தொடர்ந்து வரும்.

அடுத்த எட்டு முதல் பத்து நாள்களுக்கு நாட்டின் வடப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும் என்று சீன வானிலை ஆராய்ச்சி மையம் வியாழக்கிழமை தெரிவித்தது.

மேலும், பெய்ஜிங், தியான்ஜின், ஹெபெய், ஷாண்டோங், ஹெனான் போன்ற இடங்களின் வெப்பநிலை கண்காணிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் அம்மையம் தெரிவித்தது.

13 மில்லியனுக்குமேல் மக்கள்தொகை கொண்ட சீனாவின் வடதுறைமுக நகரமான தியான்ஜினில் வியாழக்கிழமை 41.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

இதேபோன்று வெயில் கொடுமை தொடர்ந்தால், அது மக்களுக்கு பக்கவாதம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயமுள்ளது. அதனால் தினமும் குறைந்தது 1.5 லிட்டர் தண்ணீர் அருந்துமாறும் வெளியில் செல்லும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளுமாறும் சீன அதிகாரிகள் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!