பார்சிலோனா: உலகின் ஆகப்பெரிய பண பலம் படைத்த நாடுகள், ஏழ்மையான நாடுகளுக்கு பில்லியன் கணக்கான டாலர் வழங்கவிருக்கும் வேளையில் பருவநிலை மாற்றம், வறுமையை எதிர்கொள்வதற்கான சூழல் எழுந்துள்ளது.
பாரிசில் பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் ஏற்பாடு செய்த ‘புதிய உலகளாவிய நிதி வழங்கும் உடன்பாடு’ நிகழ்வு, பருவநிலை மாற்றத்துக்கும் பசுமை உருமாற்றத்துக்கும் நிதி இருப்பை உறுதிசெய்யும் நோக்கத்தில் அமைகிறது.
கடந்த வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் 40க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் உலக வங்கி, அனைத்துலக பண நிதியம் ஆகியவற்றைச் சேர்ந்த தலைவர்களும் அவர்களில் அடங்குவர்.
இயற்கைப் பேரிடர்களில் இருந்து நாடுகள் மீள அவற்றுக்குக் கூடுதல் நிதி வழங்கும் நடைமுறை குறித்து உலக வங்கி பரிந்துரைத்துள்ளது.

