ஜகார்த்தா: இந்தோனீசியாவுக்கு 1.14 பில்லியன் டாலர் (1.54 பில்லியன் வெள்ளி) கடன் வழங்கப்படவுள்ளது. அதன் மூலம் அந்நாட்டின் நீடித்த நிலைத்தன்மை முயற்சிகளுக்கும் சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகளுக்கும் கைகொடுப்பது இலக்கு.
இந்த ஏற்பாட்டின்கீழ் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மின்சார உற்பத்தி செய்வதற்கான பசுமைத் திட்டத்துக்காக இந்தோனீசியாவுக்கு 500 பில்லியன் டாலர் வழங்கப்படும். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவதற்கான திட்டத்துக்கு 600 மில்லியன் டாலர் வழங்கப்படும்.
மின்சாரத் திட்டத்துக்கான நிதியுதவியை உலக வங்கியுடன் இணைந்து தனியார் நிறுவனங்கள், கனடா கிளீன் உனர்ஜி இயக்கம் உள்ளிட்டவை நிதியுதவி வழங்கும்.
இந்தோனீசியாவின் மின்சாரம் தொடர்பான பசுமைத் திட்டத்துக்குத் தனியார் நிறுவனங்களை ஒன்றுசேர்ந்து நிதியுதவி வழங்கச் செய்யவேண்டும்; திட்டத்தின் மூலம் மக்கள் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ள வகைசெய்வது இம்முயற்சியின் நோக்கம்.
கிழக்கு ஆசிய, பசிபிக் வட்டாரங்களுக்கான உலக வங்கி இணைத் தலைவர் மானுவெலா வி. ஃபெரோ அறிக்கை ஒன்றில் இதைத் தெரிவித்தார்.
2030ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை 32 விழுக்காடு குறைப்பது இந்தோனீசியாவின் இலக்கு. 2026ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முழுமையாக குறைக்கவும் அந்நாடு எண்ணம் கொண்டுள்ளது.
தற்போதைக்கு மின்சார உற்பத்திக்கு இந்தோனீசியா கரிமத்தை அதிகம் பயன்படுத்தி வருகிறது.
மேலும், இந்தோனீசியாவில் ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதைச் சரிசெய்வதற்கான திட்டத்துக்கு 600 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
2022ஆம் ஆண்டில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் சுமார் 4.5 மில்லியன் இந்தோனீசியக் குழந்தைகளின் வளர்ச்சி குன்றிப் போனது. இந்த விகிதம் அந்நாட்டுக் குழந்தைகளில் கிட்டத்தட்ட 21 விழுக்காடாகும்.
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்ட அரசாங்கக் கருத்துக் கணிப்பில் இந்த புள்ளி விவரக்ஙள் இடம்பெற்றுள்ளன.

