தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரண்டு சில்லுத் தயாரிப்பு உலோகங்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துகிறது சீனா

1 mins read
b8ee23e2-1907-4281-a65b-92129e2bc701
சீனாவும் அமெரிக்காவும் அனைத்து அம்சங்களிலும் தொழில்நுட்ப ஆதிக்கத்தை நாடுகின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: பகுதி மின்கடத்தி (செமிகண்டக்டர்), தொலைத்தொடர்பு, மின் வாகனத் துறைகளுக்கு மிக முக்கியமான இரண்டு உலோகங்களின் ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடு விதித்துள்ளது. அமெரிக்காவுடனும் ஐரோப்பாவுடனும் தொழில்நுட்ப ரீதியாக நிலவும் வர்த்தகப் போரின் ஒரு பகுதி அது.

கேலியம், ஜெர்மேனியம் ஆகிய அந்த இரண்டு உலோகங்களும் அவற்றின் ரசாயன சேர்மங்களும் சீனாவின் தேசியப் பாதுகாப்புக்காக, ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளுக்கு இணங்கும் வகையில் இருக்கவேண்டும் என்று அந்நாட்டின் வர்த்தக அமைச்சு கூறியது.

அந்த இரண்டு உலோகங்களுக்கான ஏற்றுமதியாளர்கள் அவற்றை நாட்டிலிருந்து வெளியேற்ற விரும்பினால், வர்த்தக அமைச்சிடமிருந்து அதற்கான உரிமத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதோடு அவர்கள் அதனை வாங்கும் வெளிநாட்டவர்களின் விவரங்கள், அவர்களின் விண்ணப்பங்கள் ஆகியவைக் குறித்தும் தகவல் தெரிவிக்கவேண்டும்.

செயற்கை நுண்ணறிவு, சில்லு உற்பத்தி என அனைத்திலும் தொழில்நுட்ப ஆதிக்கத்திற்காகப் போராடி வருகிறது, சீனா.

இந்நிலையில், சீனா மேலோங்கி இருப்பதைத் தவிர்க்க அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் உள்ள நட்பு நாடுகளையும் அவ்வாறே செய்யும்படி அது கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்