தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தும் ‘திரெட்ஸ்’ செயலி

1 mins read
b434e2f6-f232-4a56-a67b-75da759e875c
ஐரோப்பாவில் ‘திரெட்ஸ்’ வெளியீடு கட்டுப்பாடுகளால் தாமதமாகியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: ஃபேஸ்புக்கின் மெட்டா நிறுவனம் ‘திரெட்ஸ்’ எனப்படும் டுவிட்டருக்கு எதிரான போட்டிச் செயலியை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஆனால் ஐரோப்பாவில் அதன் வெளியீடு சில கட்டுப்பாடுகளால் தாமதமடைந்துள்ளது.

‘திரெட்ஸ்’ செயலி திரு எலான் மஸ்கின் டுவிட்டருக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என்று கூறப்படுகிறது.

அந்தச் செயலி 100 நாடுகளில் புதன்கிழமையன்று உள்ளூர் நேரப்படி இரவு 11 மணிக்கு ஆப்பிள், ஆண்டிராய்ட் ‘ஆப் ஸ்டோர்’இல் நேரடியாக வெளியிடப்பட்டது.

‘திரெட்ஸ்’ செயலி வெளியிடப்பட்ட முதல் சில மணி நேரங்களில் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் அதற்கு விண்ணப்பித்துள்ளதாக மெட்டாவின் தலைமை நிர்வாகி மார்க் ஸக்கர்பர்க் கூறினார்.

ஜெனிஃபர் லோபெஸ், ஷகிரா, ஹியூ ஜேக்மென் போன்ற பிரபலங்களுக்கும், தி வாஷிங்டன் போஸ்ட், தி எக்கானமிஸ்ட் ஆகியவற்றுக்குமான கணக்குகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்