சீனா: மழை வெள்ளத்தால் 40,000 பேர் வெளியேற்றம்

சீனா: மழை வெள்ளத்தால் 40,000 பேர் வெளியேற்றம்

1 mins read
d7240c60-a26b-4a21-8295-223f4ac102ce
சீனாவின் தென்மேற்கு வட்டாரத்தில் ஜூலை 6ஆம் தேதி பணியில் ஈடுபட்டிருந்த மீட்புப் படையினர். - படம்: இபிஏ

பெய்ஜிங்: சீனாவின் சீச்சுவான் வட்டாரத்தில் வெள்ளத்தை முன்னிட்டு புதன்கிழமை 40,000க்கு மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது.

மேகவெடிப்பால் நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்தது. அதனால் வெள்ளத்திலும் நிலச்சரிவுகளிலும் பல வீடுகளும் உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன. சிலர் உயிரிழந்தனர்.

யான் நகரில் 14 மணி நேரத்தில் 300.7 மில்லிமீட்டர் மழை பெய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஹெனான் மாநிலத்தில் ஆக உயரிய சிவப்பு விழிப்புநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்