விமான நிலைய இடைவழிப் பேருந்துகளில் கூட்டத்தைக் குறைக்க வலியுறுத்து

விமான நிலைய இடைவழிப் பேருந்துகளில் கூட்டத்தைக் குறைக்க வலியுறுத்து

1 mins read
c3073a97-9c10-4ff4-8481-580782344418
சுற்றுப்பயணிகள் கனமான பயணப்பைகளைத் தூக்கிக்கொண்டு கூட்டம் நிறைந்த பேருந்துகளில் நிற்க வேண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. - புவாட் ஸர்காஷி/ஃபேஸ்புக்

பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வெளிநாட்டுப் பயணிகளுக்கு முக்கியமான நுழைவாயில் என்றும் விமான நிலையத்தின் பிரதான கட்டடத்துக்கும் அனைத்துலக முனையத்துக்கும் இடையே சேவை வழங்கும் இடைவழிப் பேருந்துகள் சுற்றுப்பயணிகளால் நிரம்பி வழியும்போது மலேசியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் என்றும் ஜோகூர் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது புவாட் ஸர்காஷி கூறியுள்ளார்.

இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், “இந்த வசதி முதல் தரமாக வர்ணிக்கப்படுகிறது. ஆனால், அது சரியாக பராமரிக்கப்படவில்லை. அது தரக்குறைவாக இருப்பதைப்போலத் தெரிகிறது,” என்றார் அவர்.

“சுற்றுப்பயணிகள் கனமான பயணப்பைகளைத் தூக்கிக்கொண்டு கூட்டம் நிறைந்த பேருந்துகளில் நிற்க வேண்டியுள்ளது. குறிப்பாக, முதியோருக்கும் இந்த நிலை ஏற்படுவது துரதிர்ஷ்டவசமானது,” என்றார் டாக்டர் புவாட்.

இந்த விவகாரத்தை ஆய்வு செய்யுமாறு போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக்கையும் சுற்றுப்பயண, கலைகள், கலாசார அமைச்சர் தியோங் கிங் சிங்கையும் டாக்டர் புவாட் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்