2,000 டாலர் சம்பளத்துடன் ஓய்வுபெற உகந்த நாடு மலேசியா

கோலாலம்பூர்: வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு மாதத்துக்கு 2,000 டாலருக்கும் (2,640 வெள்ளி) குறைவான செலவில் வாழ்க்கையை நடத்த ஆகச் சிறந்த நாடு மலேசியா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் நாஸ்டாக் பங்குச் சந்தை நடத்தும் கோபேங்கிங்ரூல்ஸ் நிதி சஞ்சிகை வெளியிட்ட பட்டியலில் மலேசியா முதலிடம் வகிக்கிறது.

அமெரிக்கர்கள் ஓய்வுபெறுவதற்கு ஆகச் சிறந்த நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மலேசியாவுக்கு அடுத்தபடியாக குவைத் இரண்டாம் இடத்தில் வந்தது. மங்கோலியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

வியட்னாம் நான்காவது இடத்திலும் இந்தோனீசியா ஐந்தாவது இடத்திலும் முடித்தன. ஜோர்தான், கம்போடியா, ஓமான், சைப்ரஸ், நேப்பாளம் ஆகிய நாடுகள் பட்டியலின் எஞ்சிய இடங்களைப் பிடித்தன.

ஓய்வுபெற்ற பிறகு மாதந்தோறும் கட்டுப்படியான செலவில் காலத்தைக் கழிப்பதற்கு ஆகச் சிறந்த பாதுகாப்பான நாடுகளை அடையாளம் காண பட்டியல் வரையப்பட்டதென கோபேங்கிங்ரேட்ஸ் தெரிவித்தது. பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான நாடுகள் ஆசிய, மத்திய கிழக்கு வட்டாரங்களைச் சேர்ந்தவை.

மலேசியாவில் வாழ மாதந்தோறும் சராசரியாக 1,069 டாலர் தேவை என்பது இதன் மூலம் தெரிய வந்தது. அந்நாட்டின் பாதுகாப்புக் குறியீடு 1.471.

மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு 481.9 ட்ரில்லியன் டாலர் என்று கோபேங்கிங்ரேட்ஸ் குறிப்பிட்டது. அது, ஓய்வுபெறுவோருக்கான சிறந்த நாடு என்றும் சஞ்சிகை கூறியது.

குவைத்தில் வாழ மாதந்தோறும் சராசரியாக 1,741 டாலர் தேவை. அதன் பாதுகாப்புக் குறியீடு 1.739.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!