தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

படகு மூழ்கி 15 பேர் மரணம்; 19 பேரைக் காணவில்லை

1 mins read
7ec8fcb3-4161-44e5-97bf-3fccab5e66d9
காணாமல்போனவர்களைத் தேடி, மீட்கும் பணியில் ஈடுபடும் அதிகாரிகள். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

கென்டாரி: இந்தோனீசியாவின் சுலாவெசி தீவு கரையோரப் பகுதிக்கு அருகே திங்கட்கிழமை படகு ஒன்று மூழ்கிய விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்; 19 பேரைக் காணவில்லை.

அந்தப் படகில் 40 பேர் இருந்தனர். உள்ளூர் நேரப்படி நள்ளிரவு வாக்கில் அப்படகு மூழ்கியதாக இந்தோனீசிய தேடுதல், மீட்பு அமைப்பின் உள்ளூர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இச்சம்பவத்தில் அறுவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். படகு மூழ்கியதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுவதாக அமைப்பு கூறியது.

விபத்து நிகழ்ந்த பகுதியில் முக்குளிப்பாளர்கள் காணாமல்போனவர்களைத் தேடினர். மற்றொரு குழுவினர் படகுகளில் சென்று நீரின் மேற்பரப்பில் தேடினர்.

தென்கிழக்கு சுலாவெசியில் பூட்டோன் தீவில் உள்ள லாண்டோ கிராமத்திலிருந்து மூனா தீவில் உள்ள லகிலி கிராமத்திற்குப் படகு சென்றுகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்தது.

குறிப்புச் சொற்கள்