தாய்லாந்து பிரதமரைத் தேர்வுசெய்யும் வாக்கெடுப்பு ஒத்திவைப்பு

1 mins read
93afca63-2c51-47df-9df8-59352589e217
நாடாளுமன்ற வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடத்தப்படவிருந்தது. - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்தின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பை அந்நாட்டு நாடாளுமன்ற நாயகர் ஒத்திவைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

நாடாளுமன்ற வாக்கெடுப்பு வியாழக்கிழமை நடத்தப்படவிருந்தது. கடந்த மே பொதுத் தேர்தலில் வென்ற மூவ் ஃபார்வர்ட் கட்சித் தலைவர் பிட்டா லிம்ஜாரோன்ராட் பிரதமராவதற்கு இருமுறை முன்னெடுத்த முயற்சி முன்னதாக தோல்வியில் முடிந்தது.

மே மாத தேர்தலில் இரண்டாவது பிரபலமான கட்சியாக உருவெடுத்த பியூ தாய் கட்சி, எட்டு கட்சிக் கூட்டணியில் ஒரு பகுதியாக இவ்வாரம் பிரதமர் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்தக் கூட்டணியில் முன்னேற்றக் கட்சியும் அடங்கும்.

செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த அக்கூட்டணியின் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

குறிப்புச் சொற்கள்