72 அடி உயரத்தில் சிக்கிக்கொண்ட ‘ரோலர்கோஸ்டர்’ பிரியர்கள்

72 அடி உயரத்தில் சிக்கிக்கொண்ட ‘ரோலர்கோஸ்டர்’ பிரியர்கள்

படம்: டுவிட்டர் காணொளி

29 Jul 2023 - 6:46 pm

1 mins read

பிரிட்டன்: பிரிட்டனில் வெள்ளிக்கிழமை பிற்பகல், ‘ரோலர் கோஸ்டர்’ ஒன்றில் ஏற்பட்ட கோளாற்றால் 72 உயரத்தில் சிக்கிக்கொண்டனர் கேளிக்கைப் பிரியர்கள்.

‘ரேஜ்’ எனப்படும் அந்த ரோலர் கோஸ்டரில் கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு செங்குத்தாக வானை நோக்கியபடி அவர்கள் காத்திருக்க நேரிட்டது.

அதுகுறித்த காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவின.

சிக்கிக்கொண்ட அனைவரையும் மீட்புப் பணியாளர்கள் பாதுகாப்பாகத் தரையிறக்கியதாக ‘ அட்வெஞ்சர் ஐலண்ட்’ கேளிக்கைப் பூங்கா கூறியது.

அந்தக் கேளிக்கைப் பூங்காவில் உள்ள ஆகப் பெரிய, ஆகச் சிறந்த ரோலர் கோஸ்டராக ‘ரேஜ்’ கருதப்படுகிறது. 120 செ.மீ.க்குமேல் உயரம் இருந்தால் மட்டுமே அதில் ஏற அனுமதி உண்டு.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ரோலர் கோஸ்டரில் கோளாறு ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்