தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூறாவளியின் சீற்றத்தால் ஆயிரக்கணக்கானோர் அவதி

1 mins read
26c9828f-9ff2-44cc-b6a0-c2b2920c304f
கனமழை தொடரும் என முன்னுரைக்கப்பட்டதால் பெய்ஜிங்கில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. - படம்: இபிஏ

பெய்ஜிங்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் டோக்சுரி சூறாவளியால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேற நேரிட்டுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவில் பெய்த கனமழையால் திங்கட்கிழமை விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக சீன அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்தது. 180க்கு மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்தான நிலையில் நூற்றுக்கணக்கான விமானங்கள் தாமதமானதாகக் கூறப்பட்டது.

டோக்சுரி சூறாவளியால் ஃபூஜியான் மாநிலத்தில் சென்ற வார இறுதியில் பரவலாக வெள்ளம் ஏற்பட்டது.

பெய்ஜிங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு சராசரியாக 140.7 மி.மீ. மழை பெய்தது. ஃபங்ஷான் வட்டாரத்தில் அதிகபட்சமாக 500.4 மி.மீ. மழை பதிவானது.

வானிலைக் கண்காணிப்பு நிலையம் ஆக உயரிய சிவப்பு எச்சரிக்கையை அறிவித்துள்ளது. மேலும் கனமழை பெய்யும் என்றும் ஆறுகள் உடைப்பெடுக்கும் என்றும் பெய்ஜிங் நீர்வள நிலையம் முன்னுரைத்துள்ளது.

வெள்ளத்தால், ஏறத்தாழ 31,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேறினர். 4,000க்கு மேற்பட்ட கட்டுமானத் தளங்களில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்