லண்டன்: கரிம வெளியேற்ற நடவடிக்கையில் மற்ற நாடுகளை விட பிரிட்டன் நன்றாக செயல்பட்டுள்ளது என்று அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
கரிம வெளியேறத்தை பிரிட்டன் சரிவர கட்டுப்படுத்தவில்லை என்று இயற்கை ஆர்வலர்களிடம் இருந்து குறைகூறல்கள் எழுந்ததன, அதைத் தொடர்ந்து திரு ரிஷி தமது கருத்தை வெளியிட்டார்.
“கரிம வெளியேற்றத்தில் ஜி-7 நாடுகளில் விரைவாக செயல்படும் நாடு பிரிட்டன். நாங்கள் தொடர்ந்து நல்ல முன்னேற்றத்தைக் கண்டு வருகிறோம், எங்களது வேலையைச் சரியாக செய்து வருகிறோம்,” என்றார் ரிஷி.
பிரிட்டன் 2050ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றத்தை பூஜ்ஜியத்திற்கு குறைக்கும் இலக்கை நோக்கி செல்கிறது.
இருப்பினும் பிரிட்டன் அவ்வப்போது அதன் விதிமுறைகளை மாற்றியமைப்பதால் கரிம வெளியேற்றத்தை குறைப்பதில் சிக்கல்கள் வருவதாகக் கூறப்படுகிறது.