சோல்: தென்கொரியத் தலைநகர் சோலுக்கு தெற்கில் உள்ள நகர்ப்புறப் பகுதியில் ரயில் நிலையத்துக்கு அருகே இருக்கும் கடைத்தொகுதி ஒன்றில் நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் குறைந்தது 13 பேர் காயமுற்றனர்.
வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் ஏகே பிளாசாவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக யோன்ஹாப் நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ஆடவர் ஒருவர் மக்களைக் கத்தியால் குத்துவதாகக் கூறி அவசரகாலப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதில் சந்தேக ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் வேறொருவரைக் காவல்துறையினர் தேடி வருவதாகவும் ஜூங்ஆங் டெய்லி செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
நடைபாதைமீது மோதிய கார் ஒன்றிலிருந்து வெளியேறிய ஆடவர் இருவர் கடைத்தொகுதியை நோக்கி விரைந்ததாக சமூக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.