தேர்தல் தோல்வியை மாற்றத் திட்டமிடவில்லை: டிரம்ப்

தேர்தல் தோல்வியை மாற்றத் திட்டமிடவில்லை: டிரம்ப்

1 mins read
e18fa58c-8c64-49ed-b144-b0ce81f1cec9
முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: ஊடகம்

வாஷிங்டன்: 2020 தேர்தல் தோல்வியைத் திசைதிருப்பத் திட்டமிட்டதாகத் தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஒப்புக்கொள்ளவில்லை.

முன்னதாக, அமெரிக்க ஜனநாயகத் தூண்களைக் கீழறுக்க முன்னாள் அதிபர் ஈடுபட்டது இதுவரை வரலாற்றில் இடம்பெறாத ஒன்று என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

வாஷிங்டன் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலையான டிரம்ப், நீதிபதி மோக்சிலா உபாத்யாயா முன்னிலையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றார்.

அப்போது தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை “ஒப்புக்கொள்ளமாட்டேன்” என்றார்.

இவ்வழக்கின் விசாரணையைக் கவனித்துவரும் சிறப்பு நீதிமன்றத்தின் வழக்கறிஞர் ஜேக் ஸ்மித், முன் வரிசையில் அமர்ந்து டிரம்ப்பின் சாட்சியத்தைப் பார்வையிட்டார்.

வழக்கு விசாரணையும் டிரம்ப்பின் சாட்சியமும் அரை மணி நேரத்தில் முடிந்துவிட்டது.

அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் இந்த வாஷிங்டன் நீதிமன்றம் அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்