தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ரியலி கூல்’ விரைவில் சிங்கப்பூர் உட்படபல நாடுகளுக்கு பறக்கவிருக்கிறது

1 mins read
c8cd7436-4472-43ab-9949-072d632ee131
‘ரியலி கூல்’ விமான நிறுவனம், உள்நாட்டு விமானச் சேவைகளைவிட அனைத்துலகப் பாதைகளில் அதிக கவனம் செலுத்தவிருக்கிறது.  - படம்: பிசினஸ் டைம்ஸ்

பேங்காக்: தாய்லாந்தின் புதிய விமான நிறுவனமான ‘ரியலி கூல்’ சிங்கப்பூர் உட்பட பல நாடுகளுக்கு டிசம்பரில் விமானச் சேவைகளைத் தொடங்குகிறது.

“தாய்லாந்து சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் சான்றிதழ் கிடைத்ததும் சேவைகளைத் தொடங்குவோம். ஏற்கெனவே விமான நிறுவனத்தை நடத்துவதற்கான உரிமத்தை ஆணையத்திடமிருந்து பெற்றுவிட்டோம்,” என்று ‘ரியலி கூல்’ தலைமை நிர்வாகியான பட்டீ சரசின், 60, வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

“பேங்காக்கைத் தளமாகக் கொண்டு ‘நாங்கள் எதிர்காலத்தில் பறக்கிறோம்’ என்ற முழக்க வரியுடன் சொகுசு மற்றும் மலிவுக் கட்டண விமானப் பயணிகளுக்கு தனித்துவமான அனுபவங்களுடன் முழுச் சேவைகளை வழங்குவோம்,” என்றார்.

‘ரியலி கூல்’ தற்போது மூன்று ஏர்பஸ் ‘ஏ330’ விமானங்களை குத்தகைக்கு எடுத்துள்ளது. ஒவ்வொன்றிலும் சுமார் 300 பயணிகள் பயணம் செய்யலாம்.

“தாய்லாந்தின் ஒட்டுமொத்த விமானப் பயணிகளில் 70 விழுக்காட்டினர் வெளிநாட்டிலிருந்து வருபவர்கள். அவர்களை இலக்காகக் கொண்டு செயல்படுகிறோம். இதற்காக ஒரு பில்லியன் பாட் (S$38.6 மில்லியன்) முதலீடு செய்துள்ளோம்,” என்று திரு பட்டீ குறிப்பிட்டார்.

தொடக்கத்தில் சிங்கப்பூர், தோக்கியோ, ஹாங்காங் மற்றும் தைவான் உள்ளிட்ட வட்டார நாடுகளுக்கு சேவையாற்ற ரியலி கூல் திட்டமிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளுக்கும் இது பறக்கவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்