வீடு தீப்பற்றியதில் தந்தையும் 5 மகன்களும் பலி

வீடு தீப்பற்றியதில் தந்தையும் 5 மகன்களும் பலி

1 mins read
5c8c4096-29c3-4cc0-a2f3-878df33274ee
20 தீயணைப்பாளர்கள் போராடித் தீயை அணைத்ததாக ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகம் தெரிவித்தது. - படம்: பிக்சாபே

சிட்னி: ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ளது ரஸ்ஸல் தீவு. அங்குள்ள வீடு ஒன்றில் தீ மூண்டதால் ஆடவர் ஒருவரும் அவரது ஐந்து மகன்களும் மாண்டனர்.

சிறுவர்களின் தாயார் மட்டும் உயிர் பிழைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.

தனது மொத்தக் குடும்பத்தையும் பறிகொடுத்த அப்பெண் கடுமையான மனஅழுத்தத்தில் இருப்பதாகக் கூறப்பட்டது.

தீச்சம்பவத்தால் அவ்வீடு இடிந்து விழுந்ததாக குவீன்ஸ்லாந்து தீயணைப்பு, மீட்புப் பிரிவு கூறியது. அருகில் உள்ள சில வீடுகளும் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். 9 பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. மூவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

தீ மூண்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்