தாய்லாந்தில் எருமைகளின் ஓட்டப் பந்தயம்

1 mins read
d2242c72-1582-4f3d-a7c8-109540fcebcd
தாய்லாந்தின் சோன்பரி மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எருமையோட்டம். - படம்: ராய்ட்டர்ஸ்

சோன்பரி: தாய்லாந்தில் நெல் பயிரிடும் திருநாளைக் கொண்டாடும் வகையில் தண்ணீரில் எருமை ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.

சோன்பரி மாநிலத்தில் உள்ள நாபா புறநகர் மாவட்டப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பந்தயத்தில் 60க்கும் மேற்பட்ட எருமைகள் கலந்து கொண்டன.

தண்ணீரால் நிரப்பப்பட்ட 200 மீட்டர் பாதையில் எருமைகளை போட்டியாளர்கள் வேகமாக ஓடச் செய்தனர்.

“உணவுக்குத் தேவையான அரிசியை உற்பத்தி செய்வதற்கான நெல் அறுவடைக்கு எருமைகள் பெரிதும் உதவுகின்றன. அவற்றின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினருக்கு உணர்த்தும் நோக்கத்தில் ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பந்தயம் நடத்தப்படுகிறது,” என்று நாபா நகர மேயர் சாமார்ட் சுக்சவாங் கூறினார்.

வயல்களில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் எருமைகளைக் கௌரவிக்கவும் இந்தப் பந்தயம் ஒரு திருவிழாவாக நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வயலில் உழும் பணியில் டிராக்டர்கள் ஈடுபடுத்தப்பட்டாலும் நெற்கதிர்களைச் சுமப்பது உட்பட பல பணிகளுக்கு எருமைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்