பேங்காக்: தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் திடீரென ஏற்பட்ட நீர்ச்சுழலில் சுற்றுலாப் படகு ஒன்று சிக்கியது.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் மாண்டார்; ஒருவரைக் காணவில்லை.
பேன் லேம் மாவட்டத்திலுள்ள பேங்டாபூன் நதியில் சனிக்கிழமை மாலை இச்சம்பவம் நடந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
படகை நீர்ச்சுழல் தாக்கும்போது அதில் எழுவர் இருந்தனர். அவர்களில் பெண்கள் நால்வரும் ஆடவர் ஒருவரும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இரவு முழுவதும் மீட்புப் பணிகள் நடந்ததாகவும் ஞாயிற்றுக்கிழமை காலை ஒருவரின் உடல் கிடைத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.