பூமிக்கடியில் சுரங்கத்தில் கட்டப்பட்டுள்ள உணவகம்

பூமிக்கடியில் சுரங்கத்தில் கட்டப்பட்டுள்ள உணவகம்

படம்: இலங்கை ஊடகம்

15 Aug 2023 - 12:22 pm

1 mins read

கேகாலை: இலங்கையின் கேகாலை மாவட்டத்தில் தரை மட்டத்திலிருந்து சுமார் 124 மீட்டர் ஆழத்தில் போகல மினிரன் சுரங்கத்தில் உணவகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

போகல மினிரன் சுரங்கம் என்று அழைக்கப்படும் ‘விஜயபால மலலசேகர’ சுரங்கத்தில் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் அமர்ந்து உணவருந்தலாம். மேலும், இந்த சுரங்கத்தைப் பார்வையிட சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

அத்துடன், 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இதற்குள் நுழைய அனுமதியில்லை.

குறிப்புச் சொற்கள்