சீனா தற்போது நிலக்கரியால் இயக்கப்படும் 243 கிகாவாட் மின்சக்தியைப் பெற ஒப்புதல் பெற்றுள்ளது அல்லது அதற்கான ஆலைகள் கட்டுமானத்தில் உள்ளன. ஜெர்மனி முழுவதுக்கும் மின்சாரம் வழங்க இது போதுமானது.
ஆனால், மின்சக்தி விநியோகப் பாதுகாப்பு குறித்து உள்ளூர் அரசாங்கங்கள் இன்னமும் கவலைப்படுவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
இவ்வாண்டின் முற்பாதியில் 37 கிகாவாட் ஆற்றலுடைய நிலக்கரியால் இயங்கும் ஆலைகளைக் கட்ட சீனா தொடங்கியது. 52 கிகாவாட் புதிய திட்டங்களுக்கு அது ஒப்புதல் வழங்கியதாக எரிசக்தி, தூய்மையான காற்றுக்கான ஆய்வு நிலையத்தின் அறிக்கை தெரிவித்தது.

