சீனப் பொருள்கள் மீதான வரி விதிப்பில் மாற்றமிருக்காது: அமெரிக்க அமைச்சர்

1 mins read
1aaa0c11-13b0-4a6b-828c-d7f16d9a8680
பொருள்களை மலிவாகத் தயாரிக்கும் சீனாவின் வர்த்தக நடைமுறைகளால் அமெரிக்க தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் கினா ராய்மண்டோ கூறியுள்ளார். - கோப்புப் படம்: கினா ராய்மொண்டோ

வாஷிங்டன்: முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் ஆட்சிக் காலம் முதல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட வரியில் எந்தவித மாற்றத்தையும் தாம் எதிர்பார்க்கவில்லை என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் கினா ராய்மண்டோ தெரிவித்துள்ளார்.

மறுஆய்வு முடியும் வரை வரி விதிப்பில் மாற்றமிருக்காது. யுஎஸ்டிஆர் ஆய்வை எப்போது முடிக்கும் என்பது தெரியாது என்றார் அவர்.

2018, 2019ல் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அப்போதைய அதிபர் டிரம்ப், சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஆயிரக்கணக்கான பொருள்களுக்கு வரி விதித்தார். இந்தப் பொருள்களின் மதிப்பு சுமார் 370 பில்லியன் யுஎஸ் டாலர் (S$504 பில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

சீனா, அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகளை தவறாகப் பயன்படுத்துகிறது, அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தகம் புரிய மதிப்புவாய்ந்த தொழில்நுட்பங்களை தமக்கு மாற்றிவிடும்படி வற்புறுத்துகிறது என்று பிரிவு 301 விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து சீனாவின் பொருள்களுக்கு வரி விதிக்கப்பட்டது.

தனது நாட்டின் வர்த்தகங்களுக்கு சீனா மானியம் வழங்கி மலிவாகத் தயாரிக்கப்படுவதால் அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதில் சமநிலை தேவை. சீனாவில் அமெரிக்க நிறுவனங்கள் செயல்படுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்று ராய்மண்டோ வலியுறுத்தினார்.

ஆனால், கடந்த வாரம் பேசிய சீன வர்த்தக அமைச்சர், அமெரிக்காவில் முதலீடு செய்யும் சீன நிறுவனங்களுக்கு சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

சீனப் பொருள்கள் மீதான ‘301 பிரிவு’ வரி விதிப்பு பாரபட்சமானது என்று பெய்ஜிங்கில் ராய்மண்டோவைச் சந்தித்தபோது அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்