தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிரிட்டனில் அரசாங்க உதவிநிதி குறைக்கப்படலாம்

1 mins read
90770dbe-29ff-4a8b-95ee-cc1fd59349c3
பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

லண்டன்: பிரிட்டனில் வசதிக் குறைந்தோருக்கு அரசாங்கம் வழங்கும் உதவித் தொகை குறைக்கப்படக்கூடும். இது குறித்து அந்நாட்டுப் பிரதமர் ரிஷி சுனக் (படம்) பேசியதைத் தொடர்ந்து இந்த உணர்வு எழுந்துள்ளது.

பிரிட்டனில் இவ்வாண்டு வசதிக் குறைந்தோருக்கு வழங்கப்படும் உதவித் தொகை கணிசமாக அதிகரித்திருப்பதாக திரு சுனக் கூறியிருந்தார். இந்நிலையில் பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு அத்தொகை குறைக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.

உதவித் தொகையால் பலனடையும் அதிக பாதிப்புக்கு ஆளாகக்கூடிய குடும்பங்களை அரசாங்கம் நன்கு கவனித்துக்கொள்ளும் என்று திரு சுனக் குறிப்பிட்டிருந்தார்.

வசதி குறைந்தோருக்கு வழங்கப்படும் உதவித் தொகையை வழக்கத்துக்கு மாறாக குறைவான விகிதத்தில் உயர்த்துவது குறித்து திரு சுனக் ஆலோசித்து வருவதாக புளூம்பர்க் செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து இவ்வாறு கூறப்படுகிறது.

பொதுத் தேர்தலை முன்னிட்டு வரிக் கட்டணங்களைக் குறைக்கவேண்டும் என்று திரு சுனக்கின் பழமைவாதக் கட்சி உறுப்பினர்கள் பலர் குரல் எழுப்பி வருகின்றனர். எனினும், வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளதால் பிரிட்டிஷ் அரசாங்கம் நிதிப் பற்றாக்குறையை எதிர்நோக்குகிறது.

அதனால் வேறு வழிகளில் சேமிப்பை அதிகரிக்கும் முயற்சிகளை அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்