‘போலி விமான இயந்திர பாகங்களை விற்ற பிரிட்டிஷ் நிறுவனம்’

‘போலி விமான இயந்திர பாகங்களை விற்ற பிரிட்டிஷ் நிறுவனம்’

1 mins read
bfc708ae-771f-45df-8348-aa3dac7019fb
குற்றச்சாட்டை முன்வைக்கும்உஜெனரல் இலெக்ட்ரிக், சாஃப்ரான் நிறுவனங்கள். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

லண்டன்: பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று, போலி ஆவணங்களைக் கொண்டு ஆயிரக்கணக்கான விமான இயந்திர பாகங்ளை உலகளவில் விமான நிறுவனங்களுக்கு விற்றதாக ஜெனரல் இலெக்ட்ரிக் (ஜிஇ), சாஃப்ரான் ஆகிய நிறுவனங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இங்கிலாந்துத் தலைநகர் லண்டனில் இருக்கும் ஒரு நீதிமன்றத்தில் அந்நிறுவனங்கள் இவ்வாறு கூறின. சிஎஃப்எம் இன்டர்னேஷனல் குழுமத்தின் பங்காளி நிறுவனங்களான அவை, ஒவ்வொரு பாகம் விற்கப்பட்டதற்கான ஆவணங்களையும் ஏஓஜி டெக்னிக்ஸ் நிறுவனத்தை சமர்ப்பிக்கச் செய்யுமாறு நீதிபதியிடம் கேட்டுக்கொண்டன.

அதற்கேற்றவாறு நீதிபதி ஆவணங்கணைச் சமர்ப்பிக்குமாறு ஏஓஜி டெக்னிக்சுக்கு உத்தரவிட்டார். ஏஓஜி டெக்னிக்ஸ், பலர் அதிகம் கேள்விப்படாத ஒரு நிறுவனம்.

இந்நிறுவனம், ஆயிரக்கணக்கான விமான இயந்திரங்களை விமான நிறுவனங்களுக்கும் விமானங்களைப் பழுதுபார்க்கும் நிறுவனங்களுக்கும் விற்றதற்கு ஆவண வடிவில் ஆதாரம் இருப்பதாக ஜெனரல் இலெக்ட்ரிக், சாஃப்ரான் ஆகியவற்றின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்