தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எதிர்காலத்தில் பிரிட்டனில் சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கப்படலாம்

1 mins read
86b9a284-0956-4324-a77e-e14246ead92b
2030ஆம் ஆண்டுக்குள் புகைபிடிக்கும் பழக்கம் அறவே இல்லாத நாடாக பிரிட்டன் விளங்க பிரிட்டிஷ் அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது. - படம்: தமிழ் முரசு

லண்டன்: அடுத்த தலைமுறையினர் புகைபிடிக்க முடியாதபடி பிரிட்டனில் வருங்காலத்தில் சிகரெட்டுக்குத் தடை விதிப்பது குறித்து அந்நாட்டுப் பிரதமர் ரிஷி சுனக் பரிசீலனை செய்து வருகிறார்.

2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதிக்குப் பிறகு பிறந்தவர்களிடம் புகையிலை விற்கக்கூடாது உட்பட புகைபிடித்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை நியூசிலாந்து கடந்த ஆண்டு அறிவித்தது.

அவற்றைப் போலவே பிரிட்டனிலும் நடைமுறைப்படுத்த பிரதமர் சுனக் பரிசீலித்து வருகிறார்.

“புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட மேலும் பலரை ஊக்குவிக்கிறோம். 2030ஆம் ஆண்டுக்குள் புகைபிடித்தல் அறவே இல்லாத நாடாக பிரிட்டன் விளங்க வேண்டும் என்பது எங்கள் இலக்கு. இதனால்தான் புகைபிடித்தலைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்,” என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்