பேங்காக்கில் திடீர் வெள்ளம்

1 mins read
2cc3189a-7c5d-48bd-9560-cd8420abdd88
செப்டம்பர் 26ஆம் தேதி பேங்காக்கில் பெய்த கனமழையால் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: தாய்லாந்துத் தலைநகரான பேங்காக்கின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை பல மணி நேரம் பெய்த கனமழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பேங்காக்கின் ஃபிரா கானோங் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் 140.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக அம்மாநில வடிகால்துறை கூறியது.

பங்னா, உடோம்சுக் ரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் அது தெரிவித்தது.

இந்த வெள்ளத்தால் சுகும்விட் சாலை, அதை இணைக்கும் சோயிஸ் சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்து தடைபட்டது.

மேலும், வெள்ளநீர் புகுந்ததால் பல வாகனங்கள் பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து நடையர்களையும் வாகன ஓட்டிகளையும் மீட்க அவசர உதவி வாகனங்களை அனுப்பியதாக பேங்காக் பெருநகர நிர்வாகத்தின் வடிகால்துறை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.

வியட்னாம் கடற்பகுதியில் உருவான வெப்பமண்டலப் புயல் தாய்லாந்து நோக்கி நகர்வதால், அந்நாட்டின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.

புயல் தாய்லாந்து வழியாகச் செல்வதால் அங்குப் புதன்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்