உள்நாட்டிலேயே பயணம் மேற்கொள்ளும் சீனர்கள்

உள்நாட்டிலேயே பயணம் மேற்கொள்ளும் சீனர்கள்

1 mins read
373e32e2-d2f8-4a81-9d17-5821ba441fe7
ஷாங்ஹாயில் உள்ள ஹொங்சியாவ் அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகள். - படம்: புளூம்பர்க்

ஷாங்ஹாய்: சீனாவின் விடுமுறைக் காலம் நெருங்குகிறது. பொதுவாக இந்த விடுமுறைக் காலத்தில் அந்நாட்டைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வர்.

ஆனால் இம்முறை பலர் உள்நாட்டிலேயே பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

சீனாவின் பொருளியல் வளர்ச்சி மெதுவடைந்திருப்பதை இது பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.

இதனால் சீனாவைச் சேர்ந்த சுற்றுப்பயண முகவைகள் ஏமாற்றம் அடைந்துள்ளன.

ஆனால் பலர் உள்நாட்டிலேயே பயணம் மேற்கொள்வதால் உள்நாட்டு வர்த்தகர்கள் பலனடைவர் என்று கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளுக்குச் செல்ல முடியவில்லை என்று சீனர்கள் பலர் கவலை தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்