நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கனத்த மழை பெய்துள்ளது.
வெள்ளிக்கிழமை கொட்டித் தீர்த்த மழையால் அந்நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அதனால் ரயில் போக்குவரத்து மூடப்பட்டது. சாலைகள் ஏரிபோல் காட்சியளித்தன.
பள்ளிகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மாணவர்கள் மேல் தளத்திற்கு மாற்றப்பட்டனர்.
நியூயார்க் நகர ஆளுநர் கேத்தி ஹோச்சல் அவசர நிலையை அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் நபர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் ஹோச்சல் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலவரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்றும் அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டனர்.
திடீரென பெய்த கன மழையால் நியூயார்க் வாசிகளும் அதிர்ச்சியில் மூழ்கினர்.
தொடர்புடைய செய்திகள்
மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையவும் குறுஞ்செய்திகளும் எச்சரிக்கை ஒலிகளும் கைத்தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்டன.
போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் பலரும் பேருந்துகளில் இருந்து இறங்கி தங்கள் வீடுகளுக்கு நடந்தே சென்றனர்.

